இந்தியாவுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா உறுதி.!!

சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கு துணையாக நிற்போம் என அமெரிக்கா உறுதி.!!

செனட் வெளிநாட்டு நட்பு குழு உறுப்பினர்களுடனான சந்திப்பில் பேசிய சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ், இமயமலை எல்லையில் இந்தியாவுக்கு எதிராக சீனா ஆக்ரோஷமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டினார்.

அதுமட்டுமின்றி தென் சீனக் கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு எதிராகவும், கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானுக்கு எதிராகவும் மற்றும் ஆஸ்திரேலியா, லிதுவேனியாவுக்கு எதிராக சீனா மிரட்டல் விடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு பல நாடுகளுடன் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தவறியதற்காக சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்தினால் அதை பார்த்துக்கொண்டு அமெரிக்கா மவுனம் காக்காது எனவும் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.