கோவாக்சினை அங்கீகரித்த அமெரிக்கா... நவ.8ம் தேதி முதல் இந்திய பயணிகளுக்கு அனுமதி...

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் வருகிற நவம்பர் 8ம் தேதி முதல் அமெரிக்கா செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவாக்சினை அங்கீகரித்த அமெரிக்கா... நவ.8ம் தேதி முதல் இந்திய பயணிகளுக்கு அனுமதி...

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்நிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்க உலக நாடுகள் அனுமதி அளித்துள்ளன. 
ஆனால் இந்தியாவின் தயாரிப்பிலான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்தது.

இதற்கான அனுமதி கிடைத்ததை அடுத்து, வெளிநாட்டினருக்கான பயண கட்டுப்பாட்டு விதிகளில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது. அதன்படி வருகிற 8ம் தேதி முதல், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி அங்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.