
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சர்வதேச ஊடகத்துக்கு பேட்டியளித்த இம்ரான் கான், ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருமித்த ஆட்சியை தலிபான்கள் அமைத்தால் அது, ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் அங்கீகரிக்க வழிவகுக்கும் என கூறினார். ஆனால் இதனை செய்ய தலிபான்கள் தவறும் பட்சத்தில் அங்கு அமைதிக்கான பிரச்சனை ஏற்படும் என்றும், இது அகதிகளுக்கு வழிவகுக்கும் எனவும் கூறினார். ஆப்கன் பெண்களுக்கு வேறு ஒருவாரால் அதிகாரம் அளிக்க முடியும் என நினைப்பது தவறு எனவும் குறிப்பிட்டார்.