பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு !!

பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு !!

பாகிஸ்தானில் ரெயில்கள் மோதி கொண்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பாய்ந்து, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதின.

அதனை தொடர்ந்து சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன. அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர். 

எனினும் இந்த கோர விபத்தில் 50 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்டமாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.  இந்த விபத்தில் என்ஜினுக்கு அடியில் சிக்கி கொண்ட பெட்டியில் இருந்து மீட்பு பணியினர் உடல்களை மீட்டு உள்ளனர்.