10 ஆண்டுகளாக கவலையில் தம்பதி...வீட்டு கழிப்பறையில் கடகடவென கேட்ட சப்தம்...போய் பார்த்தால்..ஆச்சரியம்..

10 ஆண்டுகளாக கவலையில் தம்பதி...வீட்டு கழிப்பறையில் கடகடவென கேட்ட சப்தம்...போய் பார்த்தால்..ஆச்சரியம்..

10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஐபோன் தற்போது வீட்டுக்கழிப்பறையில் கிடைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, இதற்கு மகிழ்ச்சி அடைவதா, வேதனை அடைவதா என குழப்பத்தில் இருக்கிறாராம் ஐபோனின் உரிமையாளர்.

பொதுவா நாம் ஒரு பொருளை தேடும் போது சாதரணமா கிடைக்காது. அதே வேறொரு பொருளை தேடும் போது முன்பு தேடிய பொருள் கிடைக்கும். இப்படி தான் இங்கு ஒரு தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த ஒரு விலை மதிப்பில்லாத பொருள் தற்போது கிடைத்திருக்கிறது. அதுவும் அவர்கள் வீட்டிலேயே கிடைத்திருக்கிறது என்றால் அது அதிசயம் தான். அப்படிபட்ட அதிசய சம்பவத்தை தான் தற்போது பார்க்க போகிறோம்.

வாஷிங்டன் மேரிலாந்தில் பெக்கி பெக்மேன் என்பவர் தனது ஐபோனை 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2012 ஆம் ஆண்டு தொலைத்து விட்டார். அப்போது வீடு முழுக்க தேடியும் அந்த ஐபோன் கிடைக்கவில்லையாம். இதனால் போன் தொலைந்த கொஞ்ச நாட்கள் மட்டும் தேடிய பெக்கி, வெறுத்து போய் புதிய ஐபோனை வாங்கிக் விட்டாராம்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பெக்கி பெக்மேன் வீட்டு கழிவறையில் தண்ணீரை ஃபிளஷ் செய்த போது ஏதோ கலகலவென சப்தம் கேட்டுள்ளது. இதே போல் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்தும் போதெல்லாம் ஏதோ அதிரும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது.

இது குறித்து தனது கணவரிடம் பெக்கி பெக்மேன் கூறியுள்ளார். இதனையடுத்து கழிவறை பழையதாக இருப்பதாலும், கட்டுமான பணிகளை சரி வர செய்யாததாலும் இது போல் சப்தம் கேட்டிருக்கும் என்று சந்தேகித்த பெக்கி பெக்மேனின் கணவர், அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை நகர்த்த முடிவு செய்தார். பின்னர் அதேபோல் அவர் நகர்த்திய போது தான் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அது என்னன்னா...டாய்லெட்டுக்குள் பெக்கி தொலைத்த ஐபோன் மீண்டும் கிடைத்தது தான் அந்த ஆச்சரியம். உடனே ஓடி போய் பெக்கியிடம் அவரது கணவர் தெரிவித்தார். இதை நம்பாமல் பெக்கி கழிவறைக்கு வந்து பார்த்த போது அங்கு அவர் தொலைத்த ஐபோன் கிடந்துள்ளது. அதன்பின் ஐபோனை எடுத்து, ஓபன் செய்து பார்த்தபோது, போன் நல்ல கண்டிஷனில் இருந்ததை பார்த்த மகிழ்ச்சியில் பெக்கி,  இது தெரியாமல் புதியதாக ஒரு போனை வாங்கிவிட்டோமே என முழுவதுமாக மகிழவும் முடியாமல் வேதனை அடையவும் முடியாமல் இருக்கிறாராம்.

நாம் தொலைத்த பொருள் தேடும்போது கிடைக்காமல், எதிர்பாராத போது கிடைக்கும் போது சந்தோஷம் படுவதா அல்லது வேதனை படுவதா என்று குழம்புவது அனைவருக்கும் நடக்கிற ஒன்றுதான். அதுபோல தான் பாவம் பெக்கியும் குழம்பிபோய் உள்ளார் போல!