உக்ரைனுக்கு பல கோடி மதிப்பில் ஆயுத உதவி.. நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிபிசி!!

உக்ரைனுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் ஆயுத உதவி வழங்கிய நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

உக்ரைனுக்கு பல கோடி மதிப்பில் ஆயுத உதவி.. நாடுகளின் பட்டியலை வெளியிட்டது பிபிசி!!

உக்ரைன் விவகாரத்தால் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உலகளாவிய உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு வழியில்லை எனக் கூறி மேற்குலக நாடுகளிலேயே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ரஷ்ய எதிர்ப்பு என்ற ஒற்றை அடிப்படைக் காரணத்தை வைத்து உக்ரைனுக்கு பல கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை செய்து போரை நீட்டிக்கும் செயலை அந்நாடுகள் தற்போது வரை செய்து வருகின்றன.

அந்தவகையில் அதிகபட்சமாக 25.45 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவி செய்து அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது  2.5 ஆல்லியன் டாலர்களுடன் இங்கிலாந்து இரண்டாமிடமும் 1.81 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்து போலந்து 3-ம் இடமும் பிடித்துள்ளன. ஜெர்மனி 1.48, கனடா 0. 8, நார்வே 0.48, செக் குடியரசு 0.27 பில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளன. 0.16 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் 13-வது இடத்திலும் 0.11 பில்லியனுடன் இத்தாலி 15-வது இடத்திலும் உள்ளன.

ஆனால் நவீன மற்றும் கனரக ஆயுதங்களுக்கான உக்ரைனின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில் மேற்குலகம் உதவவில்லை என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக போரின் தொடக்கத்தில் இருந்தே உக்ரைன் கேட்டு வரும் போர் விமானங்களில்  ஒன்று கூட இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.