குறைபாடுடன் ஏன் பிறந்தேன்?... தன்னுடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு...

இங்கிலாந்தில் குறைபாடுடன் தாம் ஏன் பிறந்தேன்? என கூறி, தம்முடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது இளம்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறைபாடுடன் ஏன் பிறந்தேன்?... தன்னுடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு...
Published on
Updated on
1 min read

முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு டியூப் உதவியுடன் தமது வாழ்நாளை கழித்து வரும் எவீ டூம்ஸ் என்ற 20 வயது இளம்பெண், தம்முடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிலிப் மிட்செலுக்கு எதிராக, லண்டன் உயர்நீதிமன்றத்தில் விசித்திர வழக்கு தொடர்ந்துள்ளார். 

தம்முடைய தாயாருக்கு சரியான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்து இருந்தால், கர்ப்பம் தள்ளி சென்று, தாம் பிறந்திருக்காமல் இருந்திருப்பேன் என தெரிவித்துள்ளார். அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ரோசாலிண்ட் கோ, குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். 

எவீயின் தாயாருக்கு சரியான அறிவுறுத்தல்களை பிலிப் வழங்கியிருந்தால், கர்ப்பம் தள்ளி சென்றிருக்கும் என்றும், அதன் பின்னர் கர்ப்பம் தரிக்கும்போது ஆரோக்கியமுள்ள குழந்தை பிறந்திருக்கும் எனவும் கூறி, எவீக்கு இழப்பீடாக பெருந்தொகை கிடைப்பதற்கான உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். இழப்பீடு தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை. ஆனால் அது லட்சக்கணக்கில் பெரும் தொகையாக இருக்கும் என கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com