பழைய நோக்கியா போனை விழுங்கிய நபர்: மருத்துவமனைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

செல்போனை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெற்றிகரமாக செல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.  

பழைய நோக்கியா போனை விழுங்கிய நபர்: மருத்துவமனைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியை சேர்ந்த 33 வயது மதிக்கதக்க ஒருவர் 2000-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த நோக்கியா 3310 என்ற செல்போனை விழுங்கிய சம்பவம் கடந்த வாரம்  நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 செல்போனை கையில் வைத்து விளையாட்டாய் விளையாடி கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக செல்போனை விழுங்கியுள்ளார். இதையடுத்து அவர் தீராத வயிற்று நோயால் அவதிப்பட்டுள்ளார்.இதனால் பிரிஸ்டினா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்தபோது போனை விழுங்கி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 அவரது வயிற்றில் ஜீரணிக்க முடியாத அளவுக்கு பெரிய போன் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் செல்போனில் இருக்கும் இரசாயனங்கள் உடலில் சேர்ந்து உயிருக்கு ஆபத்தாய் மாறிவிடும் என்று எச்சரிக்கை கொடுத்தனர்.இதையடுத்து வயிற்றில் இருக்கும் போனை வெளியே எடுக்க வேற வழியில்லாமல் டாக்டர் டெல்ஜாகு தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.பல மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு அவரது வயிற்றில் இருந்த செல்போனை அகற்றியுள்ளனர்.