சந்திர கிரகணத்தின் சிகப்பு நிலவை இன்று முதல் நாளை இரவுக்குள் காணலாம்..! ஆனால் இந்தியாவில்...?

சந்திர கிரகணத்தின் சிகப்பு நிலவை இன்று முதல் நாளை இரவுக்குள் காணலாம்..! ஆனால் இந்தியாவில்...?

சந்திர கிரகணத்தின்  சிவப்பு நிலவை இன்று முதல் நாளை இரவுக்குள் காண நேரிடும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா தெரிவித்துள்ளது.

சூரியனுக்கும் சந்தினுக்கும் இடையே பூமி அமையும் போது சந்திரன் முழுவதும் பூமியால் மறைக்கப்பட்டு அதன் நிழல் சந்திரனில் விழும். அப்போது சந்திரன் ரத்த சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

இந்நிலையில் இந்தியாவில் சிகப்பு சந்திரனை காண முடியாது எனவும் தெற்கு மற்றும் வட அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு பசிபிக் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் யூடியூப் பக்கத்தின் லைவ் ஸ்ட்ரீமில் கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.