உலகிலேயே மிக உயரமான பெண்... கின்னஸ் உலக சாதனை படைத்த துருக்கி நாட்டு பெண்...

உலகிலேயே மிக உயரமான பெண் என்ற சாதனையை, 24 வயதே ஆன துருக்கி நாட்டு பெண் படைத்துள்ளார். 

உலகிலேயே மிக உயரமான பெண்... கின்னஸ் உலக சாதனை படைத்த துருக்கி நாட்டு பெண்...

7 அடிக்கும் மேல் உயரம் கொண்ட ருமேசா கெல்கி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த பெண்ணின் நம்ப முடியாத உயரத்திற்கு, மிகவும் அரிய மரபணு நோய் காரணம் என கூறப்படுகிறது. இதனால் அவரது உடலின் உறுதி, பிறருடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது. 

இது மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். சக்கர நாற்காலியை பயன்படுத்தும் ருமேசா, வாக்கிங் ஸ்டிக் மூலம் மெதுவாக நடக்கிறார். ஒருவருக்கு ஏற்படும் குறைபாடு ஏதோ ஒரு இடத்தில் உங்களுக்கு நன்மையாக மாறலாம் என்றும், எனவே நீங்கள் யார்? என்பதை மனப்பூர்வமாக  ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும், ருமேசா கெல்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.