
கடந்த அக்டோபர் 21ம் தேதி, திலினி வாசனா மற்றும் பிரபாத் உதயங்க தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இதில் 3 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண்குழந்தைகள் என கூறப்படுகிறது. இந்தநிலையில், குழந்தை பெற்று நைன்வெல்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அப்பெண் மற்றும் அவரது கணவரை, பிரதமர் ராஜபக்சேயின் மனைவி ஷிரந்தி, நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பரிசுகளை வழங்கிய ஷிரந்தி, எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதி கூறியுள்ளார்.