விவாகரத்து கொடு...இல்லையென்றால் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன்..! கணவனை மிரட்டிய மனைவி!

விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் நிர்வாணமாக ஊர்வலம் சென்றுவிடுவேன் என்று மனைவி கணவனை மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து கொடு...இல்லையென்றால் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன்..! கணவனை மிரட்டிய மனைவி!
Published on
Updated on
1 min read

சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 7 வழக்குகள் பதிவாகின்றன என அந்நாட்டு புள்ளியியலுக்கான பொது அமைப்பு தெரிவித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு திகைக்க வைக்கும் வகையில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன என்றும் தெரிவித்து உள்ளது. 

இந்நிலையில் பெண் ஒருவர் தன் கணவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது மனைவி ”இப்போ நீ விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் நான் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன்” என்று கணவனை மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவாகரத்து வழக்கில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் நீதிமன்றம் அவரது வழக்கை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com