Live-ல் குறுக்கே புகுந்த பெண்.. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.. என்ன சொல்ல வந்தார் தெரியுமா?

ரஷ்ய அரசு தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பின்போது போர் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Live-ல் குறுக்கே புகுந்த பெண்.. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.. என்ன சொல்ல வந்தார் தெரியுமா?

உக்ரைன் மீதான தாக்குலுக்கு ரஷ்யாவிலேயே எதிர்ப்பு காணப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நேரலை செய்தி ஓடிக் கொண்டிருந்தபோது செய்தியாளரின் பின்னால்  பெண் ஒருவர் வந்து நின்றார். அவர் கையில் வைத்திருந்த அட்டையில் போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள், பிரச்சாரத்தை நம்பாதீர்கள், உங்களிடம் இங்கே பொய் சொல்கிறார்கள் என்று ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. 

மேலும் அந்தப் பெண் போரை நிறுத்துங்கள் என முழக்கமிட்டார். உடனடியாக அவர் அங்கிருந்து அகற்றப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உக்ரைன் போருக்கான கட்டாயம் குறித்து செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இந்தநிலையில் அரசுக்கு எதிராக செயல்பட்ட அந்தப் பெண்ணின் மீது ஆயுதப்படைகளை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.