எதுல?.. "பெண்கள்" இவர்கள் கூட வந்தால் மட்டும் தான் அனுமதி.. டஜன் கணக்கான பெண்களை அனுமதிக்காக தலிபான்கள்!!

எதுல?.. "பெண்கள்" இவர்கள் கூட வந்தால் மட்டும் தான் அனுமதி..  டஜன் கணக்கான பெண்களை அனுமதிக்காக தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 7 மாதங்களாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள், பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

அண்மையில் தலிபான்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று தடை விதித்து, பள்ளிகள் திறந்து சிறிது நேரத்திலேயே பள்ளிகளை மூடி மாணவிகளை வீட்டிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள், ஆண் துணையின்றி பயணம் செய்ததற்காக வந்த டஜன் கணக்கான பெண்களை வெளிநாடுகள் உட்பட பல விமானங்களில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர். ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வந்தால் விமானங்களில் அனுமதிக்க பட மாற்றார்கள் என தலிபான்கள் அறிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமான அதிகாரிகள் கூறுகையில், வெள்ளிக்கிழமை காபூலின் சர்வதேச விமான நிலையத்திற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஏற வந்த டஜன் கணக்கான பெண்கள் ஆண் துணையின்றி பயணம் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர். பெண்களில் சிலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள்,  கனடா, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வந்தவர்கள் ஆவர் என்றார்.