அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஸாப்போரீஷியா...ஐநாவுக்கு ரஷ்யா சொன்னது என்ன?

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஸாப்போரீஷியா...ஐநாவுக்கு ரஷ்யா சொன்னது என்ன?

ஸாப்போரீஷியா அணு மின் நிலையத்தை ஐநா அணுசக்தி கண்காணிப்புக்குழு பார்வையிட எந்த தடையும் இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் ஸாப்போரீஷியா அணுமின் நிலையம்:

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையமான ஸாப்போரீஷியா, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில்  அதன் அருகிலேயே ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணு மின் நிலையம் தாக்கப்பட்டால், மற்றொரு செர்னோபில், ஜப்பானின் ஃபுகுஷிமா போன்ற அழிவு நிச்சயம் என்கின்றனர் வல்லுநர்கள். இதையடுத்து இரு நாடுகளும் ஒப்புக் கொண்டால் ஐநா அணுசக்தி கண்காணிப்புக்குழு பார்வையிடும் என்று  சர்வதேச அணுசக்தி ஆணையத் தலைவர் ரஃபேல் கிராஸி தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/india/Odisha-Students-who-do-not-pay-fees-Cruel-punishment-of-private-school-management

ராணுவமில்லா பகுதியாக அறிவிக்க வேண்டும்:

இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய ரஷ்ய தூதர் வசிலி நெபன்சியா, அணுமின் நிலையத்தின் அனைத்துச் சிக்கல்களையும் தீர்க்க அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து விரைவில் ஐநா அணுசக்தி கண்காணிப்புக்குழு ஸாப்போரீஷியா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதி ராணுவமில்லா பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம் என்று ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.