அனல் மின்நிலையம் வெளியேற்றும் புகை.... குழந்தைகளை பாதிக்கும் தோல் நோய்கள்!!

அனல் மின்நிலையம் வெளியேற்றும் புகை.... குழந்தைகளை பாதிக்கும் தோல் நோய்கள்!!

அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நச்சுப் புகை அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை சென்றடைவதாக அப்பகுதியை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளதாக கொழும்பு வர்த்தமானியில் செய்தி வெளியாகியுள்ளது. 

இலங்கையின் நொரோச்சோலையில் சீனாவால் தொடங்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நச்சு அமிலத்தால் உலகின் மிகப் பழமையான மரம் ஆபத்தில் உள்ளது.  இந்த விஷ அமிலம் சுற்றுச்சூழலில் கரைவதால் குழந்தைகளுக்கு பல வகையான தோல் நோய்களும் ஏற்பட்டு வருகின்றன.

அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நச்சுப் புகை அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை சென்றடைவதாக அப்பகுதியை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.  அதே சமயம் நச்சுப் புகையால் மின்வாரியத்தைச் சுற்றியுள்ள மரங்களின் இலைகளும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.

நொரோச்சோலையில் உள்ள இந்த மின் உற்பத்தி நிலையம் சீன நிறுவனத்தினால் சீன கடனுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த 900 மெகாவாட் ஆலை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை விட அதிகமாக புகையினை வெளியிடுவது மட்டுமல்லாமல், ஆலையில் இருந்து வெளியேறும் எஞ்சிய சாம்பல் (புகையுடன் கூடிய சாம்பல்) மற்றும் அடி சாம்பல் (கனமான சாம்பல்) திறந்த குழியில் சேமிக்கப்பட்டும் வருகிறது.  இந்த நச்சு சாம்பல் காற்றில் கலந்து வரும் புகையுடன் அப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இரவில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து... காணாமல் போன ஆறு பேர்!!