"இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு....” இந்தியாவை பெருமைப்ப்டுத்திய ஜப்பான்!!!

"இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு....” இந்தியாவை பெருமைப்ப்டுத்திய ஜப்பான்!!!

அடுத்த ஆண்டு இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டை நடத்துவத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.  இது மிகவும் முக்கியமானது.  இதில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

குவாட் மாநாடு:

அடுத்த ஆண்டு நாற்கர பாதுகாப்பு உரையாடலின் (QUAD) வெளியுறவு துறை அமைச்சர்களின் மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.  இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி கூறுகையில் ”ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா வர ஆர்வமாக உள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “வெளியுறவு துறை அமைச்சர்களின் சந்திப்பை வரும் ஆண்டில் இந்தியா நடத்தவுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.  இந்தியாவும் ஜப்பானும் எப்போதும் இணைந்தே செயல்படுகின்றன” என்றும் கூறியுள்ளார். 

குவாட் என்பது...:

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட ஒரு முறைசாரா பாதுகாப்பு மன்றமாகும்.  கடந்த ஆண்டு வாஷிங்டன் டிசியில் நடத்தப்பட்ட மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.  இதன் முதல் மாநாடு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அளவுக்கு அதிகமான சுமை...நிதி ஒதுக்கீடு தேவை...வலியுறுத்திய இந்தியா!!!