உலகமே அதிர்ந்த... தியானன்மென் சதுக்கம் ரத்தபூமியான நாள்...33-வது ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு!

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீனாவின் தியானன்மென் சதுக்கப் படுகொலைச் சம்பவத்தின் 33-வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

உலகமே அதிர்ந்த... தியானன்மென் சதுக்கம் ரத்தபூமியான நாள்...33-வது ஆண்டு நினைவுநாள்  அனுசரிப்பு!

சீனாவில் கடந்த 1989-ம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தம் கோரியும், ஊழலை ஒழிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக ஜுன் 4 ஆம் தேதி பெய்ஜிங்கில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர்  திரண்டனர். போராட்டத்தை ஒடுக்க சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவம் ஏவப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுடன் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 200 முதல் 300 பேர் உயிரிழந்ததாக அரசு கூறிய நிலையில் சில நாட்களுக்குப் பின் அது பத்தாயிரம் என்று தெரிய வந்தபோது உலகம் அதிர்ந்தது. 

இருப்பினும்  இன்று வரை பலியானவர்கள் வீடுகளில் மட்டுமே நினைவு நாள் கடைப்பிடிப்பதும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவிப்பதும் ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால், எந்த ஒரு பொது இடத்திலும் தியானன்மென் சதுக்க நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சீன அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை என்பதுடன் சம்பந்தப்பட்ட சதுக்கத்திற்குள் மட்டுமல்லாமல் ஹாங்காங் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பூங்காக்களுக்கு செல்ல மக்களுக்குத் தடை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.