மாலத்தீவிற்குள் நுழைய இந்திய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மாலத்தீவுக்கு வருகிற ஜூலை 15ம் தேதி முதல் இந்தியர்கள் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவிற்குள் நுழைய இந்திய  சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி

இயற்கை எழில் கொஞ்சும் மாலத்தீவு சுற்றுலா பயணிகளை கவரும் தலமாக உள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவியதை அடுத்து, அங்கு செல்ல தெற்கு ஆசியா நாடுகளுக்கு மாலத்தீவு அரசு தடைவிதித்தது.

இந்தநிலையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் சுற்றுலா இடங்களை திறக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 15ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசியா நாடுகள் மாலத்தீவுக்கு சுற்றுலா வரலாம் என மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலீக் அறிவித்துள்ளார்.

இதற்கான சுற்றுலா விசாவும் வழங்கப்படவுள்ள நிலையில், ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை தொற்று பாதிப்பு அளவை கண்காணித்தே, இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.