100வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் துருக்கி...பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்...!!

100வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் துருக்கி...பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்...!!

குடியரசின் 100வது ஆண்டிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக துருக்கியின் அரசியலை ஒரு புதிய சகாப்தத்தின் திருப்புமுனையாகக் மாற்ற விரும்புகிறோம்.

அதிபரின் உறுதிமொழி:

துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த துருக்கியின் அகாராவில் ஆற்றிய உரையில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதியளித்துள்ளார்.  

1980 ல் இராணுவ சதிப்புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அதன் வாழ்நாளை முடித்து விட்டது என எர்டோகன் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு சட்டம்:

புதிய அரசியலமைப்பு சட்டம் நாட்டின் ஆட்சி, பன்மைத்துவம் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்தும் என உறுதிப்பட கூறியுள்ளார் எர்டோகன்.  

குறைந்த தரவரிசை:

சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச அமைப்புகளின் தொடர்புடைய தரவரிசையில் அவரது ஆட்சிக் காலத்தில் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன. 

குடியரசின் 100வது ஆண்டு:

குடியரசின் 100வது ஆண்டிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக துருக்கியின் அரசியலை ஒரு புதிய சகாப்தத்தின் திருப்புமுனையாகக் மாற்ற விரும்புகிறோம். என்று அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.  நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் நாடாளுமன்றம் மற்றும் தேசத்தின் ஒப்புதலுடன் இது செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.  

திருத்தப்பட்ட அரசியலமைப்பு:

1982ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் 19 முறை திருத்தப்பட்டதாகவும், 2007, 2010 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்புத் திருத்தங்களுக்காக மூன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் எர்டோகன் கூறியுள்ளார். 

என்னென்ன திருத்தங்கள்:

அனைத்து பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளை உறுதி செய்யும் வரைவு அரசியலமைப்பு திருத்தங்கள் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்று எர்டோகன் தெரிவித்துள்ளார்.  

விமர்சனம்:

எர்டோகனும் அவரது கூட்டாளியான டெவ்லெட் பஹ்செலியும் தங்கள் சொந்த தேர்தல் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள் எனவும் ஆனால் அதற்குத் தேவையான வாக்குகள் அவர்களிடம் இல்லை எனவும் துருக்கியின் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மோர்பி தொங்கும் பால விபத்து...திட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடி..!!