இங்கிலாந்து: சொகுசு படகில் திடீர் தீ விபத்து.. கடற்கரைக்கு மக்கள் வருவதற்கு தடை!!

இங்கிலாந்து: சொகுசு படகில் திடீர் தீ விபத்து.. கடற்கரைக்கு மக்கள் வருவதற்கு தடை!!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து நாட்டின் டார்குவே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் படகு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் சுமார் எட்டாயிரம் லிட்டர் எரிபொருள் இருந்ததால் படகு கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது. இதனால், அந்த பகுதியில் வசிப்பவர்கள் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கடற்கரைக்கு மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க அருகில் இருந்த படகுகள் அகற்றப்பட்டன.  தீயணைப்புப் படையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த  தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும் எரிந்த படகின் மதிப்பு சுமார் 7 புள்ளி 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகு உரிமையாளர் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com