ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது.