ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட ஐ.நா. திட்டம்...

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட ஐ.நா. திட்டமிட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக நிதி திரட்ட  ஐ.நா. திட்டம்...

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது. தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.  

இதற்கிடையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின. இறுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேறின.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியதை அடுத்து நிலைமை இன்னும் மோசமாகி விட்டது என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதையடுத்து ஐ.நா. தலைவர் அன்டோனியோ கட்டரெஸ் உலக நாடுகளிடையே ஆப்கானிஸ்தானுக்கு நிதி திரட்ட ஓர் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாட்டு பிரதிநிதிகளுடன் அவர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. விரைவில் உதவத் திட்டமிட்டு வருகிறது.