மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி!

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 478 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி!

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 478 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 478 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உடல்நலம் மற்றும் ஊட்டசத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தொகை வழங்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிதியை ஆப்கான் அரசு மூலம் வழங்காமல், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் வழங்கப்படும் என ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெறாமல் தாமதித்திருந்தால், நாடு முழுவதும் தாலிபான்கள் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என அவர் தெரிவித்தார். இதனால் சண்டை முடிவு பெறாமல் தொடர்ந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.