சீன செயலிகளுக்கு முன்னாள் அதிபர் தடை! இன்னாள் அதிபர் அனுமதி: சீனாவுக்கு ஆதரவா?

டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகளின் புதிய பதிவிறக்கங்களுக்கு தடை விதித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்பின் உத்தரவுகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

சீன செயலிகளான டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தடை விதிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  புதிய பயனர்கள் இந்த  செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி தடை உத்தரவு பிறப்பித்தார். நடைமுறைக்கு வராத அந்த உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்தன. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டிருக்கிறார். அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.