சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர்.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக தொலைபேசி வழியாக பேசினர்.

இந்நிலையில், இன்று இருவரும் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.