மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என நினைத்து செய்தியாளரை திட்டிய அதிபர் ஜோ பைடன்...!! இணையத்தில் வைரலாகும் வீடியோ

பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருமையில் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் ஜோ பைடனிடம் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி என்பவர், நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததால், மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என நினைத்து பணவீக்கம் குறித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து, ” அது மிகப்பெரிய சொத்து... அதிக பணவீக்கம்.... என்ன ஒரு முட்டாள்தனமான நபர்” என்று ஜோ பைடன் திட்டியது மைக்கில் பதிவானது. இதை கேட்ட செய்தியாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து செய்தியாளரை ஜோ பைடன் ஒருமையில் திட்டும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், கொக்கு மாட்டும் மீன் போல எப்போட சிக்குவானுங்கனு கொக்கு போல காத்திருக்கும் எதிர்கட்சிகளுக்கு சொல்லவா வேணும், அவரே வாய் விட்டு சிகி கொண்டதால் இந்த சம்பவம் தொடர்பாக ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Democrat President Joe Biden calls a reporter asking about inflation a “stupid son of a bitch.” pic.twitter.com/Hd1N5Ni2WA
— Ryan Saavedra (@RealSaavedra) January 24, 2022