ஆப்கானிஸ்தான் நிவரம் குறித்து விவாதிக்க அமெரிக்கா, ரஷ்ய அதிகாரிகள் டெல்லி வருகை...

ஆப்கானிஸ்தான் நிவரம் குறித்து விவாதிக்க, அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் நிகோலாய் பத்ருஷேவ் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நிவரம் குறித்து விவாதிக்க அமெரிக்கா, ரஷ்ய அதிகாரிகள் டெல்லி வருகை...

ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலீபான்கள், அங்கு இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். ஆப்கன் விவகாரத்தில் இந்தியா-ரஷ்யா இடையே ஒருமித்த கருத்து உள்ளதாகவும், பயங்கரவாதம் தலை தூக்கும் போது இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சமாளிக்கும் என ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்க, இந்தியா-ரஷ்யா இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் நிகோலாய் பத்ருஷேவ் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதைப்போல டெல்லி வந்திருந்த சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், நேற்று அஜித் தோவலை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.