அமெரிக்கா துப்பாக்கி தாக்குதல்....உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு....

அமெரிக்கா துப்பாக்கி தாக்குதல்....உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு....

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில், அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.  இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை......