உக்ரைன் - ரஷ்யா போர்: விவரிக்க முடியாத அளவிற்கு நிலைமை கடினம் - ஜெலன்ஸ்கி

உக்ரைனில் கிழக்குப் பகுதியின் நிலைமை விவரிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.உக்ரைனில் கிழக்குப் பகுதி

உக்ரைன் - ரஷ்யா போர்: விவரிக்க முடியாத அளவிற்கு நிலைமை கடினம் - ஜெலன்ஸ்கி

3 மாதங்களைக் கடந்த நிலையில் ரஷ்ய ராணுவம் போரில் நுட்பமான வேகத்தை காட்டி வருகிறது. இதனால் டான்பாஸ் பகுதியில் முக்கிய நகரங்கள் அனைத்தும் ரஷ்யா வசமாகி வருகிறது. ஆயுதங்கள் வரும் வழிகளை எல்லாம் அடைத்து வரும் நிலையில் உக்ரைன் படைகள் பின்வாங்கி வருகின்றன.

இந்த நிலையில் வீடியோவில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

கிழக்குப் பகுதியில் உக்ரைனின் பாதுகாப்பு நிலைத்திருந்தாலும் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இழந்த அனைத்தையும் உக்ரைன் திரும்பப் பெறும் என்றும் அதற்கான நேரமும் வரும் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.