"இனப்படுகொலை செய்கிறது".. ரஷ்யா மீது உக்ரைன் தாக்கல் செய்த பரபரப்பு வழக்கு.. 16ஆம் தேதி தீர்ப்பு!!

ரஷ்யா இனப்படுகொலை செய்வதாக உக்ரைன் தாக்கல் செய்த வழக்கில் வரும் 16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

"இனப்படுகொலை செய்கிறது".. ரஷ்யா மீது உக்ரைன் தாக்கல் செய்த பரபரப்பு வழக்கு.. 16ஆம் தேதி தீர்ப்பு!!

கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய நிலையில் போரை நிறுத்த உத்தரவிடக் கோரி 27-ம் தேதி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இம்மனு மீது கடந்த 7 மற்றும் 8-ம் தேதி விசாரணை  நடைபெற்றது. அப்போது ரஷ்ய ராணுவ  ஏவுகணைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இனப்படுகொலை தடுப்புச் சட்டத்தை ரஷ்யா மீறி விட்டதாகவும் உக்ரைன் தரப்பில் வாதிடப்பட்டது.

குடிமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த 2 நாள் விசாரணையையும் புறக்கணித்த ரஷ்யா, பொருத்தமில்லாத அபத்தமான வழக்கு என கருத்துத் தெரிவித்தது. இந்தநிலையில் உக்ரைன் தொடர்ந்த வழக்கில் வரும் 16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.