தீப்பிழம்புகளை கக்கி வரும் எரிமலை - வீடுகளை காலி செய்யும் நிலை

தீப்பிழம்புகளை கக்கி வரும் எரிமலை - வீடுகளை காலி செய்யும் நிலை

ஸ்பெயினில் லா பால்மா தீவில் உள்ள கும்ப்ரே எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருவதால், அதனை சுற்றியுள்ள சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  

கும்ப்ரே எரிமலையானது கடந்த 19ஆம் தேதி முதல் உக்கிரமாக தீப்பிழம்பு, சாம்பல் மற்றும் கரும்புகையை கக்கி வருகிறது.

இதனால் பல ஹெக்டேர் அளவிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் எரிமலைக்கு அருகே உள்ள நகரங்களில் வாழும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பு கருதி அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.