என்ன இனி ஒரு முட்டாள் தான் ட்விட்டர் தலைவரா...என்ன கூறுகிறார் எலான் மஸ்க்?!!

என்ன இனி ஒரு முட்டாள் தான் ட்விட்டர் தலைவரா...என்ன கூறுகிறார் எலான் மஸ்க்?!!

உலகின் இரண்டாவது பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் தொடர்பாக புதிய மற்றும் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விரைவில் ராஜினாமா செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். 

வாக்களிப்பு:

சமீபத்தில் நடத்தப்பட்ட ட்விட்டர் கருத்துக்கணிப்புக்குப் பிறகு மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார்.  அவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டுமா என்று மக்களிடம் ட்விட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தார்.  இந்த கருத்துக்கணிப்பில் 57.5 சதவீதம் பேர் மஸ்க் ராஜினாமாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

கருத்துகணிப்பு:

டிசம்பர் 19 அன்று எலான் மஸ்க் இந்த ட்விட்டர் வாக்கெடுப்பை நடத்தினார்.  மேலும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எதுவாக இருந்தாலும் மக்கள் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தார்.  நடந்த வாக்கெடுப்பில் 17,502,391 பேர் வாக்களித்திருந்த நிலையில் 57.5 சதவீத மக்கள் மஸ்கின் ராஜினாமாவுக்கு ஆதரவாகவும் 42.5 சதவீதம் பேர் அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க வேண்டும் என்றும் வாக்களித்திருந்தனர். 

முட்டாள் கிடைத்தால்:

ராஜினாமா அறிவிப்புடன், எலான் மஸ்க் எதிர்காலத் திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.  தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்க ஒரு முட்டாள் கிடைத்தால் உடனே ராஜினாமா செய்வதாகவும், நிறுவனத்தில் உள்ள மென்பொருள் மற்றும் சர்வர் குழுவை மட்டும் தான் கவனிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    வாழ்த்துகள் இந்தியா...எதற்காக இந்த வாழ்த்து?!!!