அழிந்து போன டைனோசர் மிருகம் மனிதர்களுக்கு வலியுறுத்துவது என்ன? - ஐ.நா.வின் விளம்பர வீடியோ  

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போன டைனோசர் மிருகம், தற்போது மனிதர்களிடம் எதனை வலியுறுத்துகிறது? என்பது தொடர்பான விளம்பர வீடியோவை, ஐ.நா. சபை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.வில் கம்பீரமாக நுழைந்து மேடையில் பேசும் டைனோசர், பருவநிலை மாற்றத்தால் உலகம் பேரழிவை நோக்கி செல்வதாக கூறியுள்ளது. அழிந்து போவது ஒரு மோசமான விஷயம் என குறிப்பிட்டுள்ள டைனோசர், பெட்ரோலியம் போன்ற புதைபடி எரிபொருள்களை வேகமாக கைவிட வேண்டும் என்றும், வறுமையில் வாடும் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

அழிவை தேர்வு செய்யாதீர்கள் என்றும், தாமதமாகும் முன் உங்கள் இனத்தை காப்பாற்றுங்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கும் டைனோசர்,  மனிதர்களாகிய நீங்கள் சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்தி விட்டு, மாற்றங்களை செய்ய தொடங்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளது.

According to @IMFNews, the world's governments are spending USD 11 million a minute to support fossil fuels which cause heat-trapping greenhouse gas emissions. #DontChooseExtinction, says @UNDP ahead of #COP26. pic.twitter.com/0jK4JBSFEd

— UN Climate Change (@UNFCCC) October 27, 2021 ">