உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60.15 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.54 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60.15 லட்சமாக அதிகரிப்பு

சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.54 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60. 15 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 37.82 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரத்து 528 ஆக உள்ளது.