செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் இளைஞர் !!

25 வயது இளைஞர் ஒருவர் செயற்கை இதயத்துடன் 555 நாட்கள் உயிர்வாழ்ந்து, மருத்துவ நிபுணர்களையே வியப்படைய செய்துள்ளார்.

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் இளைஞர் !!

25 வயது இளைஞர் ஒருவர் செயற்கை இதயத்துடன் 555 நாட்கள் உயிர்வாழ்ந்து, மருத்துவ நிபுணர்களையே வியப்படைய செய்துள்ளார்.

ஸ்டான் லார்க்கின் என்ற இளைஞரின் இதயத்தின் இரு அறைகளும் செயலிழந்ததை அடுத்து, அவரது 25வது வயதில் மாற்று இதயம் பொருத்துவது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த கடின காலக்கட்டத்திலும், பிற இளைஞர்கள் போல் வெளியே செல்ல ஆசைப்பட்ட இளைஞருக்கு தற்காலிகமாக செயற்கை இதயம் எனப்படும் சின்க்ஆர்காடியா என்ற கருவி பொருத்தப்பட்டது.

இதனை எப்போதும் தன்னுடன் சுமந்து வந்த அவர், ஓராண்டுக்கு மேலாக அதன் உதவியுடன் உயிர்வாழ்ந்து மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தற்போது 25 வயதில் அவருக்கு மாற்று இதயம் பொருத்தப்பட்ட நிலையில், செயற்கை இதயம் மூலம் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள லேசான விளையாட்டு பயிற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.