இந்தியா மீது கோபம் கொண்ட அமெரிக்கா...காரணம் இது தான்!

இந்தியா மீது கோபம் கொண்ட அமெரிக்கா...காரணம் இது தான்!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்ய எண்ணெய் பொருட்கள் குறித்த கேள்விகளுடன் அமெரிக்கா அரசு இந்திய அரசை அணுகியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பத்ராவின் கருத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

நடுக்கடலில் எண்ணெய் பரிமாற்றம்

பத்ராவின் கூற்றுப்படி, அமெரிக்க கருவூலம் நாட்டின் அதிகாரிகளுக்குத் தெரிவித்தது, ஒரு இந்தியக் கப்பல் நடுக் கடலில் ரஷ்ய எண்ணெய்க் கப்பல் இருந்து எடுத்து, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அனுப்பியது. அங்கு எண்ணெய் பதப்படுத்தப்பட்டது. பின்னர் நியூயார்க்கிற்கு அனுப்பப்பட்டது.

ஒடிசாவில் நடந்த இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வில் பத்ரா கூறியதாவது "ரஷ்ய எண்ணெயை வாங்குபவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் இது அமெரிக்க கருவூலத்தால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது ... ஒரு இந்திய கப்பல் நடுக்கடலில் ரஷ்ய எண்ணிய்க் கப்பலை சந்தித்தது. நடுக்கடலில் எண்ணெய் எடுத்தது. பின்பு அதை குஜராத்தில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு வந்தது.அந்தத் துறைமுகத்தில் பதப்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. எண்ணெய் மீண்டும் அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டு புறப்பட்டது. கப்பலின் பயண இலக்கு பற்றி அதற்கு தெரிவிக்கப்படவில்லை.

குறிப்பிட்ட தொலைவு சென்றவுடன் நடுக்கடலில் அது செல்ல வேண்டிய இடம் பற்றிய தகவலைப் பெற்றது, அதனால் அது நியூயார்க்கிற்குச் சென்றது, ”என்று கூறிய அவர் அந்தக் கப்பலின் பெயரை வெளியிடவில்லை. அல்லது இந்த விஷயத்தில் வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

ரஷ்ய எண்ணெய்க்குத் தடை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக அந்நாட்டிற்கு எதிராக பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதை அமெரிக்கா தடை செய்தது.

இந்தியா 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு ரஷ்ய எண்ணெயை அரிதாகவே வாங்கியது. ஆனால் மார்ச் மாதத்திலிருந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதலை பத்து மடங்கு அதிகரித்தது. ரஷ்யா வழங்கிய சலுகையையும் பயன்படுத்திக் கொண்டது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, ஜூன் மாதத்தில் ஈராக்கிற்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளுக்கான இரண்டாவது பெரிய எண்ணிய் விநியோகிப்பாளராக சவூதி அரேபியாவை ரஷ்யா முந்தியது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் பத்ராவின் கருத்து குறித்து கேட்டபோது, புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இது குறித்து எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் இந்த செயலால் அமெரிக்கா கடும் கோபத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.