அமெரிக்கா தோற்றுவிட்டது, அந்நியப் படைகளுக்கு இது ஒரு பாடம்: தலிபான்கள் எச்சரிக்கை

நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தோற்றுவிட்டது, அந்நியப் படைகளுக்கு இது ஒரு பாடம்: தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதியன்று முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்நிலையில், ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்டன. இதனைக் கொண்டாடும் விதத்தில் தலிபான்கள் காபூல் விமானநிலையத்துக்குச் சென்றனர். விமான நிலையத்தின் ஓடுதளத்தில் துப்பாக்கியுடன் குவிந்த தலிபான்கள் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டாடினர்.

பின்னர் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் ஐபிபுல்லா முஜாகீத், இஸ்லாமிய ஆப்கன் அமீரகம் இனி சுதந்திரமான நாடு. இதில் நாம் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் அமெரிக்கா தோற்றுவிட்டது என்றார்.

இந்நிலையில், எங்கள் நாட்டின் சார்பாக நாங்கள் உலகின் பிற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்புகிறோம். ஆப்கன் மக்களின் சுதந்திரம் போற்றப்படும். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறும். நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம். தலிபான் படைகள் கண்ணியமாக நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.

.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com