"ஜி20 யை, ஜி 21 ஆக மாற்றி, பிரதமர் சாதனை படைத்துள்ளார்" அண்ணாமலை!!

"ஜி20 யை, ஜி 21 ஆக மாற்றி, பிரதமர் சாதனை படைத்துள்ளார்" அண்ணாமலை!!

ஆப்பிரிக்க நாட்டை ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக சேர்த்து ஜி21 ஆக மாற்றி பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்து உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவிற்கு மாற்றாக இந்தியா தலைவராக இருக்கும் என்ற நம்பிக்கை ஜி20 மாநாட்டில் ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

டெல்லியில் இந்தியா தலைமையில் நடக்கும் ஜி20 உச்ச மாநாடு மிகப்பெரிய சரித்திரம் படைத்துள்ளதாகவும், இந்த டெல்லி பிரகடனம் வருங்காலத்தில் பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com