பன்றிக்காக அடுக்குமாடி கட்டிடமா? சீனாவை மிஞ்ச முடியாது போலயே!

ஒரு தனி அடுக்கு மாடி கட்டடம் உருவாக்கி அதில், பன்றிகளை வளர்த்து உற்பத்தி செய்கிறதாம் சீனா.. அது குறித்த விவரனக்களைப் பார்க்கலாம்...

பன்றிக்காக அடுக்குமாடி கட்டிடமா? சீனாவை மிஞ்ச முடியாது போலயே!

சீனாவில் உலகின் மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைந்துள்ள நிலையில், இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஹூபேயின் ஏசோ என்ற நகரில் 26 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டு பன்றிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே சமயத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட வசதிகளுடன் உருவான இந்த பண்ணையில் இருந்து வரும் கழிவுகளை கொண்டு பயோகேஸ் உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

Experts warn of increased risk of disease outbreaks as China builds  26-storey 'pig palace' - India Today

மேலும், அங்கு வளர்க்கப்படும் பன்றிகாளுக்கு தானியங்கி திட்டம் மூலம் உணவு வழங்க 30,000 உணவளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து ஆண்டிற்கு 12 லட்சம் பன்றிகளை வளர்த்து, பன்றி கறியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், ஒரே இடத்தில் இவ்வளவு பன்றிகளை வளர்த்து பண்ணை உருவாக்கிய திட்டம் ஒரு விபரீத முடிவு எனவும், சீனா எடுத்துள்ள முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கையுடன் பார்க்கின்றனர்.

ஏன் என்றால், ஏற்கனவே கொரோனா அச்சுருத்தலுக்கு முன்பே பன்றி காய்ச்சல் பெரிதாக பரவி மக்களை கதிகலங்க வைத்த நிலையில், ஒரு வேளை இங்கு இருக்கும் லட்சக்கணக்கான பன்றிகளில் ஏதேனும் ஒரு பன்றிக்கு பன்றிக்காய்ச்சல் வந்தாலும் அது பெரிதளவில் பாதிக்கும்.

மேலும் படிக்க |