கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு 15 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபயவை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டுமென பிரிட்டன் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் இட் டேவி உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இலங்கையை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றது குறித்து கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, கோத்தபயவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற் கட்சிகளும் ஆதரவை வெளியிட்டுள்ளன.

கோத்தபய ஒரு லட்சம் தமிழர்களை கொன்றதாக சில பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் பிரிட்டன் நீதித்துறை அமைச்சர் அமென்டா எலிஸ் வெளியிட மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.