"யாராவது எனக்கு உதவ முடியுமா?"!!உதவிக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர்!!!

"யாராவது எனக்கு உதவ முடியுமா?"!!உதவிக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர்!!!
Published on
Updated on
1 min read

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001 ஜுன் மாதம் சீனாவின் ஷாங்காய் பகுதியில் நிறுவப்பட்டது.  முதலில் ஆறு உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2017ல் எட்டு உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பானது.

உறுப்பு நாடுகள்:

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான்.

2022 மாநாடு:

கொரானா காலக்கட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடியோ கான்பரசிங் மூலம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்று மாநாட்டை நடத்துகின்றனர்.

இரண்டு பிரிவினர்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள்.  

பாகிஸ்தான் -ரஷ்யா:

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நேற்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது, ​​ஷெரீப் தனது இயர்போனை காதில் இணைக்க முயன்றபோது இணைக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

ஷெரீஃப் அவரது இயர்போன்களை பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால்  "யாராவது எனக்கு உதவ முடியுமா?" என உதவிக்கு அழைத்தார்.  புதின் அதை சிரித்தபடியே பார்த்து கொண்டிருந்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை:

​​பாகிஸ்தானிடம் தேவையான உள்கட்டமைப்புகள் ஏற்கனவே உள்ளதால், ரஷ்யாவால் எரிவாயுவை வழங்க முடியும் என்று புதின் ஷெரீப்பிடம் கூறியுள்ளார்.  ரஷ்யாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குழாய்வழி எரிவாயு விநியோகம் பற்றிய பிரச்சனை குறித்து புதின் பேசும்போது “ ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வழியே உள்கட்டமைப்பின் ஒரு பகுதி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்கான் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com