காணொளி வாயிலாக கூட்டம்... காபி குவளையில்... எம்.பி செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!!

காணொளி வாயிலாக கூட்டம்... காபி  குவளையில்... எம்.பி செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!!

கனடாவில் காணொளி வாயிலாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் காஃபி கப்பில் சிறுநீர் கழித்த காட்சி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

கொரோனா நெருக்கடியால் அனைத்து அலுவல்களும் காணொளி வாயிலாகவே நடைபெற்று வருகிறது. அதன்படி கனடாவில் அதிகார்ப்பூர்வ நாடாளுமன்ற அலுவல் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் ஆமோஸ் என்பவர்,  கியூபெக்-கனடா தேசியக்கொடிகளுக்கு இடையில் நிர்வாண நிலையில் காஃபி கப்பில் சிறுநீர் கழித்துள்ளார்.

காணொலியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வில்லியம் ஆமோஸ் இவ்வாறு நடந்து கொண்டது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இச்சம்பவம் எதிர்பாராத வகையில் நடந்து விட்டதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள வில்லியம் ஆமோஸ் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். வில்லியம் ஆமோஸ் காணொலியில் நிர்வாணமாக தோன்றியது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com