குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கே அதிகம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கே அதிகம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கே அதிகமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற 12க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் குழந்தைகளுக்கு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை குரங்கு காய்ச்சல் பதிவாகவில்லை என்றும்,  ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டோர் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் உடல் வலி, உடலில் தடிப்புகள், காய்ச்சல் போன்றவையே குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com