தொடரும் ராஜினாமா...

தொடரும் ராஜினாமா...

இலங்கையில் தொடரும் போராட்டங்களால் பதவி விலகுவதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்கா பெரேரா அறிவித்துள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக  ஜூன் 24ம் தேதி தம்மிக்கா பெரேரா நியமனம் செய்யப்பட்டார் என இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிக்கை வெளியிட்டது.

நாட்டின்  பொருளாதார நிலை மற்றும் சூழலை கருத்தில் கொண்டு அப்போது  பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் அதற்கான தீர்வைக் கண்டறிந்து அதை விரைவாக செயல்படுத்த முனைந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் அவர் நாட்டின் நலனுக்காக செயல்படுவதாகவும் அத்தகைய நடவடிக்கையை எளிதாக்கும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை போராட்டக்காரர்கள்,அவர்கள் பதவி விலகும் வரை இல்லங்களை ஆக்கிரமிக்கப்போவதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதில் நம்பிக்கை இல்லை எனவும் அவர்கள் பதவி விலகும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.