இனி ஊரடங்கே கிடையாது: அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

இங்கிலாந்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இனி ஊரடங்கே கிடையாது: அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

இங்கிலாந்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசிகள் வந்த பிறகு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு ஊரடங்கை நீக்கியுள்ளது. அதன்படி, இரவு நேர கிளப்கள், உள் அரங்கு கூட்டங்கள் ஆகியவை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல் மற்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவதற்கான சட்ட ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

அதேசமயம் பொதுமக்கள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சுணக்கம் காட்டக் கூடாது என்றும், பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.