பாதுகாப்பு பயிற்சி....இரண்டு நாட்டு தமிழர்களையும் பிரிக்கும் நோக்கமா?!!

பாதுகாப்பு பயிற்சி....இரண்டு நாட்டு தமிழர்களையும் பிரிக்கும் நோக்கமா?!!

இந்திய மீனவர்களுக்கான பயிற்சியானது எமக்கு மாத்திரமின்றி நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலான சூழலை உருவாக்கும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பயிற்சி:

அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடற்ப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்.  மிகுதிப்பேர் மாநிலப் படையில் இணையவுள்ளதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத் தலைவரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மஹாசபைத் தலைவருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பயிற்சி எதற்காக?:

மேலும் இராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கேள்வியெழுப்பிய அவர் இது ஏன் வழங்கப்பட்டது என்றால், இந்தியாவில் இருந்து மஞ்சள், உரங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்துவதை தடுப்பதற்காகத்தான் இது அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விரிசலை உருவாக்கும்:

உண்மையிலே இந்த பயிற்சி வழங்கப்பட்டது என்பது ஒரு விரிசலைத்தான் உருவாக்கும் என்று கூறிய முரளிதரன் இது வந்து அரசாங்கம், இரண்டு நாட்டு தமிழர்களையும் ஒன்றாக இணைவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற ரீதியில் திட்டமிட்டு செய்யப்படுவதாக தான் எங்களுக்கு தோன்றுகிறது எனவும் கூறியுள்ளார்.

சந்தேகம்:

தொடர்ந்து பேசிய அவர் ஆகையால் இந்த பயிற்சியை வழங்குவதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனாலே இன்னமும் பின்னடைவுகள் தான் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது எனவும் அங்கு உள்ள சாதாரண இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை கொடுத்தால் அது எமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் ஆனால் இந்திய மீனவர்களுக்கு இந்த பயிற்சியை கொடுப்பதால் அதனை நாங்கள் ஒரு சந்தேத்தில் பார்க்க வேண்டிய தேவை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படாத காலப்பகுதியிலேயே எமது கடற்கரையில் இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் வந்து செல்கின்றனர் என்றும் ஆகையால் பயிற்சியும் வழங்கப்பட்டால் அவர்களுடைய பயிற்சி வந்து இன்னமும் வித்தியாசப்படும் எமவும் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம்:

அந்தவகையில் இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யப்போகிறது எனவும் இதனை நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம் என்றால் அவர்கள் இதற்கு ஒரு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com