இந்தோனேசியாவை பயமுறுத்திய நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் எவ்வளோ தெரியுமா?

இந்தோனேசியாவை பயமுறுத்திய நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் எவ்வளோ தெரியுமா?

Published on

இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்:

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தான் இந்தோனேசியா. தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், தற்போது  இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.

முதற்கட்ட தகவல் :

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் கட்டிடங்கள், வீடுகள்  இடிந்து விழுந்ததில் இதுவரை  20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மீட்புப்பணி:

மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதைத்தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. 

அதிகாரிகள் பேச்சு:

இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், " மருத்துவமனையில் மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் பெரும்பாலோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி எலும்பு முறிவுகளால் காயமடைந்தவர்கள்" என்றும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com