டெஸ்லா உரிமையாளர் மஸ்க் செப்டம்பர் 2021 முதல் முதலிடத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு மஸ்க் இரண்டாவது இடத்திற்கு சரிந்தது இதுவே முதல் முறை.
கீழிறங்கிய மஸ்க்:
எலோன் மஸ்க் உலகப் பணக்காரர் என்ற நிலையிலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸின் பணக்காரர்களின் பட்டியலின்படி, மஸ்க் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அவருக்குப் பதிலாக 73 வயதான பிரெஞ்சு பில்லியனர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னேறிய அர்னால்ட்:
ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தாய் நிறுவனமான LVMH இன் உரிமையாளர் அர்னால்ட். ஃபோர்ப்ஸின் ரியல் டைம் குறியீட்டின்படி, பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்தின் நிகர மதிப்பு 184.7 பில்லியன் டாலர். ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க்கின் சொத்தின் நிகர மதிப்பு 184.6 பில்லியன் டாலர்.
மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவில் எலான் மஸ்க்கின் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், சமூக ஊடக தளமான ட்விட்டரை 4400 கோடி ரூபாய்க்கு வாங்கியதாலும் எலோன் மஸ்க்கின் சொத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்லா உரிமையாளர் மஸ்க் செப்டம்பர் 2021 முதல் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ளார். ஆனால் தற்போது மஸ்க் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
அதானியின் இடம்:
பணக்காரர்களின் தரவரிசையில் இந்தியாவின் கௌதம் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1348 கோடி ரூபாயாகும். அதே நேரத்தில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது சொத்தின் மதிப்பு 1112 கோடியாகும்.
முகேஷ் அம்பானியின் இடம்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 933 கோடி. முன்னதாக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட் ஐந்தாவது இடத்திலும், பில் கேட்ஸ் ஆறாவது இடத்திலும், லாரி எலிசன் ஏழாவது இடத்திலும் இருக்கின்றனர். அதே நேரத்தில், அம்பானிக்கு அடுத்தபடியாக, லாரி பேஜ் மற்றும் கார்லோஸ் ஸ்லிம் ஆகியோர் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளனர்.
-நப்பசலையார்