தலிபான் தலைவரை தில்லாக பேட்டி எடுத்த பெண் பத்திரிக்கையாளர்: தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி வேறு நாட்டிற்கு அகதியாக சென்ற அவலம்…  

தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்களைப் போல் நானும் என் தாய்நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என தலிபான் தலைவரிடம் தில்லாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.  
தலிபான் தலைவரை தில்லாக பேட்டி எடுத்த பெண் பத்திரிக்கையாளர்: தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி வேறு நாட்டிற்கு அகதியாக சென்ற அவலம்…   
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் அரைகுறை ஜனநாயகத்துடன் மக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்தனர். ஆனால் தற்போது தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அதுவும் முடிவுக்கு வந்தது. தலிபான்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளுமே அதிக துன்பங்களை அனுபவித்தனர். அவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது பெண்களை மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் தலிபான்களோ தாங்கள் திருந்திவிட்டதாகவும், பெண்களுக்கு உரிமை வழங்குவோம் எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, முக்கிய தலிபான் தலைவர்களில் ஒருவரான மவுலவி அப்துல்லா ஹேமத்தை பெண் பத்திரிகையாளரான பேஹஸ்டோ அர்கான்ட் நேர்காணல் எடுத்தார். அப்போது கடந்த முறையைப் போல் காபூலில் வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா என்று தில்லாக அர்கான்ட் கேள்வி கேட்க, அதற்கு அவர் பவ்யமாக இல்லை என்று சொன்னதும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முத்துக்கள் என்றார். இந்த நேர்காணல் செய்த வீடியோவும் சோசியல் மீடியாக்களில் டிரெண்டானது. ஆனால் தற்போது சோகமான செய்தியாக அவர் தாயகத்திலிருந்து வேறு நாட்டிற்கு அகதியாக சென்றுவிட்டார்.

ஆப்கானியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற இன்றே கடைசி நாள் என்பதால் அவர் நேற்றே வெளியேறிவிட்டார். “ஆப்கனில் பெண்களுக்கான பாதுகாப்பு சூழல் மேம்பட்டால் நான் திரும்புவேன். தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்களைப் போல் நானும் என் தாய்நாட்டை விட்டு வெளியேறுகிறேன்” என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com